

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'ஓ பட்டர்பிளை'. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி பிரியா, சந்திர மௌலி, கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. ஹனிமூன் செல்லும் தம்பதி, அங்கு வரும் மனைவியின் முன்னாள் காதலன் என மூவருக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமாக 'ஓ பட்டர்பிளை' உருவாகியுள்ளது.
இந்த நிலையில், 'ஓ பட்டர்பிளை' படத்தின் முழு ஆல்பமும் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற மார்ச் 6-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.