சர்வதேச பட விழாவில் ‘ஓ மை கடவுளே’

சர்வதேச பட விழாவில் ஓ மை கடவுளே.
சர்வதேச பட விழாவில் ‘ஓ மை கடவுளே’
Published on

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம் ஓ மை கடவுளே. இதில் விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் வந்தார். காதல் நகைச்சுவை படமாக தயாராகி இருந்தது. அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார்.

கொரோனா ஊரடங்கில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ஓ மை கடவுளே படத்தை பார்த்து விட்டு பாராட்டினார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவிவில். ஒ மை கடவுளே படம் பார்த்தேன். ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி இருந்தது. அசோக் செல்வன் இயல்பாக நடித்துள்ளார். திரைக் கதை சிறப்பாக இருந்தது என்று கூறியிருந்தார். தெலுங்கிலும் படத்தை ரீமேக் செய்கின்றனர். இந்த நிலையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட ஓ மை கடவுளே படம் தேர்வாகி உள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்த திரைப்பட விழா நடக்க உள்ளது. ஏற்கனவே கார்த்தியின் கைதி படத்தையும் டோரன்டோ பட விழாவில் திரையிட தேர்வு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com