ஈஷா ரெப்பாவின் ''ஓம் சாந்தி '' பட முதல் பாடல் வெளியீடு


OmShantiShantiShantihi First single Sinnari Kona out now
x

இப்படத்தில் தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

சென்னை,

இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகர் என பன்முகத் திறன் கொண்ட தருண் பாஸ்கர், தற்போது ஒரு கிராமப்புற நகைச்சுவை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஈஷா ரெப்பா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ஏ.ஆர். சஜீவ் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ருஜன் யாரபோலு, ஆதித்யா பிட்டி, விவேக் கிருஷ்ணானி, அனுப் சந்திரசேகரன், சாதிக் ஷேக் மற்றும் நவீன் சனிவரபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்திற்கு ''ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி'' என்று பெயரிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இப்படம் ஜனவரி 23-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் 'சின்னாரி கோனா' வெளியாகி உள்ளது.

1 More update

Next Story