

இந்த நிலையில் 26 வயது டி.வி. நடிகை ஒருவர் மும்பை வெர்சோவா போலீசில் இயக்குனர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், சினிமா காஸ்டிங் டைரக்டர் ஆயுஷ் திவாரி எனக்கு சினிமா படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். இதனால் அவருடன் நெருங்கி பழகினேன். 2 வருடங்களாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனால் கர்ப்பமானேன். திருமணத்துக்கு வற்புறுத்தியதும் எனது நடத்தை சரியில்லை என்று கேவலமாக பேசி மறுத்து விட்டார். என்னை நம்பவைத்து ஏமாற்றி விட்டார் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஆயுஷ் திவாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.