டுவிட்டரில் 2017 அதிகம் பேசப்பட்ட சினிமா படங்கள் பாகுபலி 2, மெர்சல்

டுவிட்டரில், இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட படங்களாக பாகுபலி 2, மெர்சல் ஆகிய படங்கள் பதிவாகியுள்ளதாக மைக்ரோ-பிளாக்கிங் சைட் என்ற நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
டுவிட்டரில் 2017 அதிகம் பேசப்பட்ட சினிமா படங்கள் பாகுபலி 2, மெர்சல்
Published on

மைக்ரோ-பிளாக்கிங் சைட் நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு வருடமும் அதிமாக டிரெண்டான விஷயங்களை சமூக வலைத்தளமான டுவிட்டர் வெளியிட்டு வருகிறது. 2017-ம் ஆண்டு பாகுபலி 2 , மெர்சல் ஆகிய படங்கள் அதிகம் பேசப்பட்டுள்ளன. #Mersal என்ற ஹேஷ்டாக்கில் மூன்றே நாளில் 17 லட்சம் டுவீட்கள் இடம்பெற்றுள்ளன என்று தெரியவந்துள்ளது

மேலும் நடிகர் சூர்யா வெளியிட்ட, தானா சேர்ந்த கூட்டம் ( #TSK) படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் இந்த வருடம் அதிகம் ரீ ட்விட் (68,856 ரீ ட்விட்) செய்யப்பட்டுள்ளது.ஜல்லிக்கட்டு, முத்தலாக், ஜிஎஸ்டி, டிமானிடைசேஷன் ஆகிய விஷயங்களும் இந்த வருடம் டுவிட்டரில் அதிகமாக டிரெண்டாகியுள்ளன என்றும் அந்நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

விளையாட்டைப் பொறுத்தவரை, இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி அதிகப்பட்சமாக 1.8 மில்லியன் ரீடிவிட் ஆகியுள்ளதாகவும் மைக்ரோ-பிளாக்கிங் சைட் கூறுகிறது

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com