சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை?


Once a Bollywood queen, now in consideration for Chiru-Odela film?
x

ஸ்ரீகாந்த் ஒடெலா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீகாந்த் ஒடெலா. இவரது இயக்கத்தில் நானி நடிப்பில் வெளியான 'தசரா'படம் ரூ. 110 கோடிக்கும் மேல் வசூலித்தது. இப்படத்தைத்தொடர்ந்து, நானியின் 33-வது படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கி வருகிறார். இப்படத்திற்கு 'தி பாரடைஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் ஸ்ரீகாந்த் ஒடெலா, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை நடிகர் நானி, எஸ்எல்வி சினிமாஸின் சுதாகர் செருகுரியுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜியிடம் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது. 'ராஜா கி ஆயேகி பாராத் என்கிற படத்தின் மூலம் அறிமுகமான முகர்ஜி, கரன் ஜோகரின் 'குச் குச் ஹோதா ஹே' என்கிற காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார்.

1 More update

Next Story