"ஒரு கூலி 100 பாட்ஷாக்களுக்கு சமம்" - நாகார்ஜுனா


One Coolie is Equal to 100 Baashas: Nagarjunas Statement at at Coolie trailer launch event
x
தினத்தந்தி 3 Aug 2025 9:30 AM IST (Updated: 3 Aug 2025 10:53 AM IST)
t-max-icont-min-icon

'கூலி' படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதனை வெளியாகியுள்ள டிரெய்லர் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை,

''கூலி'' டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நாகார்ஜுனா பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் ''கூலி'' திரைப்படம் வருகிற 14-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதில், நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இந்தப் படம் அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 'கூலி' படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், அதனை வெளியாகியுள்ள டிரெய்லர் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த், நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா , லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அந்த விழாவில் பேசிய நாகார்ஜுனா, ஒரு கூலி 100 பாட்ஷாக்களுக்கு சமம் என்றும் ரஜினிகாந்தை இந்தியத் திரைப்படத் துறையின் ஓஜி சூப்பர் ஸ்டார் என்றும் கூறினார்.

1 More update

Next Story