“ஜெயிலர் 2” படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

‘ஜெயிலர் 2’ படத்தின் பின்னணி வேலைகள் மற்றும் வெளியீட்டு பணிகளை படக்குழு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
“ஜெயிலர் 2” படப்பிடிப்பில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி
Published on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்தப் படம் ரூ.600 கோடி வரை வசூலித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. மீண்டும் ரஜினி - நெல்சன் கூட்டணி இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. முதல் பாகத்தை போலவே இந்த படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கேமியோ கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்னா மேனன், வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்தது.

பேட்ஜ் ஓர்க் என சொல்லப்படும் விடுபட்ட காட்சிகளை ‘ஜெயிலர் 2’ படக்குழு படமாக்கி வருகின்றனர். சென்னை, ஈசிஆர் ரோட்டில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் இதற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆர்ட் டைரக்சன் பணியை சேர்ந்த சேலத்தை சேர்ந்த கார்த்திகேயன், என்பவர் மின் தொழிலாளியாக பணி செய்து வந்தார். பணியின் போது மின்சாரம் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் படக்குழுவினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து கானத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com