

சென்னை,
பிச்சைக்காரன் பட கூட்டணியில் மீண்டும் உருவாகியுள்ள படம் 'நூறு சாமி'. இப்படத்தில், விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற மே 1ந் தேதி வெளியாக உள்ளது.
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு, 'நூறு சாமி' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த போஸ்டரில், வாக்கு ஒரு நொடி... அதன் விளைவு ஐந்து ஆண்டு.. உங்கள் வாக்கு, உங்கள் உரிமை.. ஒரு ஓட்டு..ஒரு விரல்..ஒரு புரட்சி..ஒரே ஒரு நாள்! என்ற வாசம் இடம்பெற்றுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதையடுத்து, மக்கள் அதிக ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். நகரங்களிலும், கிராமங்களிலும் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.