கருடன் வெளியாகி ஓராண்டு நிறைவு.. 'என் வாழ்நாளில்' சூரி உருக்கம்


கருடன் வெளியாகி ஓராண்டு நிறைவு.. என் வாழ்நாளில் சூரி உருக்கம்
x

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கிய 'கருடன்' படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.

சென்னை,

இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் வெளியான படம் 'கருடன்'. சசிகுமார், உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் சூரியின் நடிப்பு பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், கருடன் வெளியாகி ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அது உங்கள் அன்பால் உயிர் பெற்ற உணர்வு. இந்த ஒரு ஆண்டு எனக்கு வாழ்நாள் வரைக்கும் நினைவாக இருக்கும். உங்கள் ஆதரவும் நம்பிக்கையும் என்றைக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில். மிக்க நன்றி." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story