சின்னத்திரை நடிகரின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் பண மோசடி

நடிகர் பெயரில் மர்மநபர்கள் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
சின்னத்திரை நடிகரின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் பண மோசடி
Published on

புதுச்சேரி,

புதுவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவர், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு மூலம் ரூ.18 ஆயிரம் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் படி, அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன், சின்னத்திரை மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் கே.பி.ஒய். பாலா பெயரில், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிதி கேட்டு இன்ஸ்டாகிராமில் குறுந்தகவல் வந்துள்ளது.

இதனை உண்மையென நம்பிய அவர், ரூ.18 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். பின்னர், நடிகர் பெயரில் மர்மநபர்கள் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பணம் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com