இன்னும் இரண்டு மாதங்கள்தான் - நடிகர் விஷால்


இன்னும் இரண்டு மாதங்கள்தான் -  நடிகர் விஷால்
x

ஆக. 29ம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

சென்னை,

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 99-வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. நடிகர் கார்த்தி, படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். இதில், நடிகர்கள் கார்த்தி, தம்பி ராமையா இயக்குனர் வெற்றிமாறன், மணிமாறன், சரவண சுப்பையா உள்ளிட்டேர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில், நடிகர் சங்க கட்டட திறப்பு மற்றும் திருமணம் எப்போது என்ற கேள்விகளுக்கு நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார். அதில்,

ஒன்பது வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டேன் இன்னும் இரண்டு மாதங்கள்தான். ஆக. 29ம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி உள்ளது. நான் சொன்னபடி அந்த கட்டடம் தயாரானதும் முதல் திருமணம் என்னுடையதுதான் என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story