சரத்குமார் நடித்துள்ள 'ஆபரேஷன் ராஹத்' டீசர் வெளியானது

சரத்குமார் நடித்துள்ள ‘ஆபரேஷன் ராஹத்’ டீசர் வெளியாகி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சரத்குமார். இதுவரை 100-ம் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம் பொருள் ஆகிய திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சரத் குமாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த மாதம் வெளியான ஹிட் லிஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்தடுத்து போலீஸ் கதாபாத்திரத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது 150- வது படமான 'தி ஸ்மைல் மேன்' என்ற படத்தில் ஒப்பந்தமானார்.

இந்நிலையில் சமீபத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி திருமணம் நடத்து முடிந்தது. கடந்த ஜூலை 3-ம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமண வரவேற்பு விழா நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் மேஜர் ரவி இயக்கத்தில் சரத் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் "ஆபரேஷன் ராஹத்". கே கிருஷ்ணகுமார் எழுதிய, இந்த பான்-இந்திய திரைப்படத்தை பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. தயாரிப்பு குழுவில் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவாளராகவும், ரஞ்சின் ராஜ் இசையமைப்பாளராகவும், டான் மேக்ஸ் எடிட்டராகவும் உள்ளனர்.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகி சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது, "உங்கள் வாழ்த்துக் குழுவிற்கு நன்றி... "ஆபரேஷன் ராஹத்" - இந்த சிறந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி" என்றும் தெரிவித்துள்ளார்,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com