நடிகை ஜோதிகாவுக்கு எதிர்ப்பு

ஜோதிகா திருமணத்துக்கு பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
நடிகை ஜோதிகாவுக்கு எதிர்ப்பு
Published on

அவரது நடிப்பில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்கள் ஏற்கனவே வந்துள்ளன. தற்போது கவுதம் ராஜ் இயக்கத்தில் ராட்சசி படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக ஜோதிகா நடித்துள்ளார். ஆசிரியர்களும், ஆசிரியைகளும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுங்காக பாடம் நடத்தாமல் கதை புத்தங்கள் படிப்பது, செல்போனில் முடங்கி கிடப்பது, மாணவர்கள் சிகரெட், வன்முறை என்று தவறான வழிகளில் செல்வதுபோன்ற காட்சிகள் படத்தில் உள்ளன. அரசு பள்ளி ஆசிரியைகள் அதிக சம்பளம் பெறுவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மீது போதிய கவனம் செலுத்தாததால் அவர்கள் மருத்துவம் போன்ற உயர்கல்விகளில் சேர முடியவில்லை என்ற வசனங்களும் படத்தில் உள்ளன. இந்த வசனமும், காட்சிகளும் உண்மையாக உழைக்கும் அரசு பள்ளி ஆசிரியர்களை இழிவுபடுத்துவதாக இருக்கிறது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

வலைத்தளங்களில் அரசு பள்ளி ஆசிரியர்-ஆசிரியைகள் ஜோதிகாவை கண்டித்து பேசி வருகிறார்கள். ஜோதிகாவுக்கு ஆதரவாகவும் கருத்துகள் பதிவாகின்றன. இது சமூக வலைத்தளத்தில் விவாதமாக மாறி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com