சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. அந்த படத்தில் அவர், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார்.
சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுக்கிறது
Published on

பாணா காத்தாடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், சமந்தா. அந்த படத்தில் அவர், அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். சென்னை பல்லாவரத்தில் வசித்து வந்த இவர் ஆரம்பத்தில் பிற மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார். அவருக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால், வீட்டை ஐதராபாத்துக்கு மாற்றிக்கொண்டார். அப்போதுதான் இவருக்கும், நாக சைதன்யாவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர், ஒரு வெப் தொடரில் நடித்தார். அதில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் பெண் விடுதலைப்புலியாக நடித்து இருக்கிறார். அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்யும் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவராக அவருடைய கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இது விடுதலைப்புலி இயக்கத்தை குறிப்பது போல் இருக்கிறது என்று தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள் கருதுகிறார்கள். இதனால் சமந்தாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் உலக தமிழர்களின் கோபத்தை சம்பாதித்து இருக்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com