''தக் லைப்'' படத்திற்கு எதிர்ப்பு: ''கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏன்? - நடிகர் துருவா சர்ஜா பதில்


Opposition to the film Thug Life: Why didnt you raise your voice in support of Kamal? - Actor Dhruv Sarja responds
x

''கேடி - தி டெவில்'' படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை,

கன்னட திரைப்படமான ''கேடி - தி டெவில்'' படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

அப்போது ''தக் லைப்'' படத்தை கர்நாடகாவில் வெளியிட எதிர்ப்பு கிளம்பியபோது கமலுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார் . அதற்கு நடிகர் துருவா சர்ஜா பதிலளிக்கையில்,

" எல்லோரும் அவரவர் தாய் மொழியை நேசிக்கிறார்கள். அதே போலதான் எங்களுக்கும். எங்கள் தாய் மொழிக்கு ஒன்று என்றால், கண்டிப்பாக கோபம் வரும். அந்தப் படத்தை (தக் லைப்) தவிர மற்ற படங்கள் வெளியாகவே செய்தன. எங்கள் கன்னட மக்கள், எல்லோரையும் வரவேற்பார்கள்" என்றார்

'ஆக்சன் கிங்' அர்ஜுனின் சகோதரி மகனான துருவா சர்ஜா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள பான் இந்திய திரைப்படம் 'கேடி - தி டெவில்'. இயக்குனர் 'ஷோமேன்' பிரேம் இயக்கத்தில் காளி என்ற கதாபாத்திரத்தில் துருவா நடிக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன் தயாரித்துள்ளது. ரீஷ்மா நானையா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story