பாலியல் வன்கொடுமை வழக்கு - டைரக்டருக்கு ஜாமீன் வழங்கிய கேரள ஐகோர்ட்டு

டைரக்டர் உமர் லுலு தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள இளம் நடிகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
Oru Adaar Love director Omar Lulu granted interim anticipatory bail by Kerala HC in alleged sexual assault case
Published on

திருவனந்தபுரம்,

பிரபல மலையாள டைரக்டர் உமர் லுலு. இவர் மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு அடார் லவ், நல்ல சமயம், டமாக்கா, பேட் பாய்ஸ் உள்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

சமீபத்தில், பட வாய்ப்பு தருவதாக கூறி டைரக்டர் உமர் லுலு தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள இளம் நடிகை நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இளம் நடிகை அளித்த புகாரில், பட வாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி உமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இந்த புகார் தொடர்பாக டைரக்டர் உமர் லுலு மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடிகை அளித்த புகாருக்கு டைரக்டர் உமர் லுலு விளக்கமளித்திருந்தார். அதில், நடிகை என்னுடைய சமீபத்திய படத்தில் பணிபுரிந்திருந்தார். தற்போது எனது புதிய படம் தொடங்கியுள்ள நிலையில், இதுபோன்ற புகாரை அவர் முன்வைத்துள்ளார். அவர் தனது அடுத்த படத்தில் நடிக்காததுதான் இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு காரணம். இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த கேரள ஐகோர்ட்டு டைரக்டருக்கு ஜாமீன் வழங்கி, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com