

திருவனந்தபுரம்
மலையாள திரையுலகில் ஒமர் லுலு இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம் பெற்றுள்ள மாணிக்ய மலராய பூவி என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்த பாடல் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து வைரலாகி வருகிறது. அந்த பாடலை இதுவரை சுமார் 1 கோடி பேர் யுடியூபில் பார்த்து உள்ளனர்.
இதற்கு காரணம், அந்த பாடலில் கண்ணால் பேசியும், வெட்கப்புன்னகை சிந்தியும் சிறப்பான நடிப்பை வழங்கிய இளம் நடிகை பிரியா வாரியர்.
பள்ளி மாணவியாக நடித்துள்ள அவர், தனது மனம் கவர்ந்த சக மாணவனிடம் புருவங்களை உயர்த்தியும், கண் சிமிட்டியும் தனது காதலை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.
இந்த படத்தின் மற்றொரு டீசரில், அந்த மாணவனுக்கு நளினமாக பறக்கும் முத்தம் கொடுக்கும் காட்சியும் இடம்பெற்று இருக்கிறது.
கேரள அழகி போட்டியில் வெற்றி பெற்றுள்ள பிரியா வாரியர், இந்த பாடலால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகை ஆகிவிட்டார்.
படம் ரிலீஸ் ஆகும் முன்பே அவருக்கு போனிலும், இணைய தளங்களிலும் ஏகப்பட்ட பாராட்டுகள் வந்து குவிக்கின்றன. வாட்ஸ் ஆப்பிலும் பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தன. இதனால் பிரியா தனது போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டார்.
இந்த நிலையில், அவர் நடித்து வரும் படம் பற்றி ஒரு டி.வி.க்கு பேட்டி அளித்தார். இதை பார்த்த இயக்குனர் பிரியாவிடம், ஒரு அடார் லவ் படம் அடுத்த மாதம் திரைக்கு வரும் வரை இனி யாருக்கும் பேட்டி கொடுக்கவே கூடாது என்று தடை விதித்துள்ளார்.
அப்போது அவர்கள், மாணிக்ய மலராய பூவி பாடல் ஒருசில மணிநேரத்தில் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த சமயத்தில் பாடல் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க முடிவு செய்தோம். ஆனால் ரசிகர்கள் பாடலை நீக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததாலும், இதற்கு ஆதரவு அதிகரித்திருப்பதாலும் பாடலை நீக்க தேவையில்லை என தீர்மானித்துள்ளோம். படத்தில் இருந்து பாடலை நீக்குவதா? வேண்டாமா? என்பது குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என்றனர்.
படம் திரைக்கு வரும் முன்பு ஒரு கண் அசைவில் பரபரப்பு ஏற்படுத்திய பிரியா வாரியர் மீது, திரை உலக பிரபலங்களின் பார்வை விழுந்திருக்கிறது. எனவே, தமிழ் படங்களிலும் அவர் கால் பதிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த பாடலை யூடியூபில் இருந்து நீக்க போவதாக படத்தின் இயக்குநர் உமர் லுலு நேற்று கூறினார். இது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கிது. திடீரென நேற்று இரவு படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோர் கொச்சியில் நிருபர்களை சந்தித்தனர்.