'ஒரு நொடி' படத்தின் டிரெயிலர் வெளியானது

'ஒரு நொடி' படம் வரும் ஏப்ரல் 26 -ம் தேதி வெளியாகவுள்ளது.
'ஒரு நொடி' படத்தின் டிரெயிலர் வெளியானது
Published on

தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஒரு நொடி' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆரி அர்ஜுனன் படத்தின் இசையை வெளியிட, தயாரிப்பாளர் சி. வி. குமார், பழ. கருப்பையா, வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பட குழுவினர் பெற்றுக் கொண்டனர். 

"எல்லோருடைய வாழ்க்கையிலும் நடைபெறும் ஒரு நொடி. அந்த ஒரு நொடி எதைப் பற்றியதாக வேண்டுமானாலும் இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி ஒரு நொடியில் நடைபெற்ற சம்பவம் தான் இந்த படத்தின் கதை. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்," என்று தெரிவித்தார் அறிமுக இயக்குநர் மணிவர்மன்.

'ஒரு நொடி' படத்தில் தமன்குமார், எம்.எஸ். பாஸ்கர், வேல. ராமமூர்த்தி, பழ. கருப்பையா, ஸ்ரீ ரஞ்சனி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.ஜி. ரத்தீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சஞ்சய் மாணிக்கம் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் படத்தின் டிரெயிலர் வெளியாகியுள்ளது. காணாமல் போன.கணவனான எம்.எஸ் பாஸ்கரை தேடி போலீசிடம் புகார் கொடுக்கிறார் மனைவி. போலீஸ் கதாப்பாத்திரத்தில் தமன்குமார் நடித்துள்ளார். அதற்கடுத்து என்ன நடந்தது என்பதே கதை. டிரெயிலர் மிக விறுவிறுப்பாக அமைந்துள்ளது. படம் வரும் ஏப்ரல் 26 -ம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்தை 'காற்றின் மொழி', 'இவன் தந்திரன்', 'கோடியில் ஒருவன்', 'கொலைகாரன்' போன்ற படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை வழங்குகிறார். மதுரை அழகர் மூவிஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ் தயாரிக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com