'ஒரு பேரே வரலாறு' - ஜனநாயகன் படத்தின் 2-வது பாடல் புரோமோ வெளியானது

‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ளது.
'ஒரு பேரே வரலாறு' - ஜனநாயகன் படத்தின் 2-வது பாடல் புரோமோ வெளியானது
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) ஜனவரி 9-ந்தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

அரசியலில் களமிறங்கியுள்ள விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ஜனநாயகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வருகிற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலின் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி 'ஒரு பேரே வரலாறு' என்ற பாடல் நாளை (18-ம் தேதி) மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை விஷால் மிஸ்ரா மற்றும் அனிருத் இணைந்து பாடியுள்ளனர். இந்த புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com