'டிராமா' படத்தின் 'ஒரு பார்வ' பாடல் வெளியானது


OruPaarva Song From Trauma is Out Now
x

விவேக் பிரசன்னா நாயகனாக நடிக்கும் படம் 'டிராமா' .

சென்னை,

10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் விவேக் பிரசன்னா. இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவைகளில் பெரும்பாலனவை குணசித்ர வேடங்கள் அல்லது காமெடி வேடங்கள். அவர் தற்போது நாயகனாக நடிக்கும் படம் 'டிராமா' . இப்படத்திற்கு ஆர் எஸ் ராஜ்பரத் இசை அமைக்கிறார், அஜித் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தம்பிதுரை மாரியப்பன் இயக்கும் இந்த படத்தை டர்ம் புரொடக்சன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிக்கிறார். விவேக் பிரசன்னாவுடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் நடிக்கிறார்கள். மெடிக்கல் கிரைம் திரில்லர் ஜார்னரில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்நிலையில் 'டிராமா' படத்தின் 'ஒரு பார்வ' பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை நரேஷ் அய்யர், பூஜா வைத்தியநாத் பாடியுள்ளனர்.

1 More update

Next Story