பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு


பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு ஆஸ்கர் விருது அறிவிப்பு
x

image courtesy: @TomCruise

தினத்தந்தி 18 Jun 2025 9:10 PM IST (Updated: 18 Jun 2025 9:57 PM IST)
t-max-icont-min-icon

டாம் குரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது.

ஹாலிவுட் சினிமாவில் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் டாம் குரூஸ். இவர் யாராலும் செய்யமுடியாத ஸ்டன்ட் காட்சிகள் சாதரணமாக செய்து முடிப்பவர். இவரது நடிப்பில் சமீபத்தில் 'மிஷன்: இம்பாஸிபிள் - தி பைனல் ரெக்கானிங்' என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சியின் மூலம் கின்னஸ் சாதனையில் டாம் குரூஸ் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிலையில், பல்வேறு சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் சொந்தக்காரரான டாம் குரூஸ், திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக அவருக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி ஆப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

டாம் குரூஸுடன் இணைந்து டெபி ஆலன், வின் தாமஸ் மற்றும் டோலி பார்டன் ஆகியோருக்கும் கவுரவ ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது வழங்கும் விழா வருகிற நவம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெறவுள்ளது. கவர்னர்ஸ் விருது என்று அழைக்கப்படும் இந்த ஆஸ்கர் விருதானது 35 வருடங்களுக்கு பிறகு டாம் குரூஸுக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story