ஆஸ்கார் விருது: சிறந்த ஆவணப்படம் பிரிவில் இந்திய இயக்குனரின் படம்

ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆஸ்கார் விருது: சிறந்த ஆவணப்படம் பிரிவில் இந்திய இயக்குனரின் படம்
Published on

டெல்லி, 

சர்வதேச அளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் கருதப்படுவது ஆஸ்கர் விருது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

அந்தவகையில் 96வதுஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வருகிற மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர் பட்டியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த முறை இந்தியாவில் இருந்து எந்த படைப்புகளும் தேர்வாகவில்லை.

ஆனால் இந்தியாவில் பிறந்த கனடா நாட்டு இயக்குனர் இயக்கிய 'டு கில் ஏ டைகர்' என்ற ஆவணப்படம் சிறந்த ஆவணப்பட பிரிவில் தேர்வாகியுள்ளது. இதில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமையையும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளுக்கு எதிராக சிறுமியின் தந்தை நடத்திய சட்டப்போராட்டத்தையும் மையாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிறந்து, தற்போது கனடா நாட்டில் வாழ்ந்து வரும் நிஷா பஹுஜா என்கிற பெண் இந்த படத்தை தயாரித்து, இயக்கியுள்ளார். இந்த படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று மிகப்பெரிய கவனத்தையும் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com