சிலியன் மர்பி நடிக்கும் ''ஸ்டீவ்''...பர்ஸ்ட் லுக் வெளியீடு


Oscar Winner Cillian Murphy set to star in Steve for Netflix
x
தினத்தந்தி 28 Jun 2025 10:15 AM IST (Updated: 28 Jun 2025 10:31 AM IST)
t-max-icont-min-icon

இதில், சிலியன் மர்பி ஆசிரியராக நடிக்கிறார்.

சென்னை,

நெட்பிளிக்ஸின் ''ஸ்டீவ்'' படத்தில் ஆஸ்கர் விருது பெற்ற சிலியன் மர்பி நடிக்கிறார். தி இம்மார்டல் மேன் படத்திற்குப் பிறகு அவர் மீண்டும் நெட்பிளிக்ஸுடன் இணைந்திருக்கிறார்.

மேக்ஸ் போர்ட்டரின் ஷையின் நாவலை தழுவி இப்படம் உருவாகிறது. தற்போது பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சிலியன் மர்பி ஆசிரியராக நடிக்கிறார்.

மேலும், இப்படத்தில் ஜே லைகர்கோ, ஷையாக, டிரேசி உல்மேன், சிம்பி அஜிகாவோ மற்றும் எமிலி வாட்சன் ஆகியோரும் நடிக்கின்றனர். டிம் மிலாண்ட்ஸ் இப்படத்தை இயக்குகிறார்.

கடந்த ஆண்டு வெளியான ''ஸ்மால் திங்ஸ் லைக் தீஸ்'' படத்திற்குப் பிறகு மிலாண்ட்ஸ், மர்பி மற்றும் எமிலி வாட்சனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். ''ஸ்டீவ்'' படம் அக்டோபர் 3 முதல் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

1 More update

Next Story