ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் இடம்பெறவில்லை
Published on

சென்னை,

94- வது ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன் இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு 'Belfast', 'CODA', 'Dont Look Up', 'Drive My Car', Dune', 'King Richard', 'Licorice Pizza', 'Nightmare Alley', 'The Power of the Dog', 'West Side Story' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன.

இடம் பெறாத ஜெய் பீம்

ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை. தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படமும், மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com