ஆஸ்கர் விழா: விருதுகளை அள்ளிய ‘சின்னர்ஸ், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படங்கள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சின்னர்ஸ்' திரைப்படம் மொத்தம் 4 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
ஆஸ்கர் விழா: விருதுகளை அள்ளிய  ‘சின்னர்ஸ்,  ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ படங்கள்
Published on

சினிமா உலகில் தலைசிறந்த விருது என்பது ஆஸ்கர் விருது ஆகும். இந்த ஆஸ்கர் விருதினை அடைவதே ஒவ்வொரு திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. இந்த ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் லாஸ் ஏஞ்சல்ஸில் இந்த விழா நடைபெறுகிறது.

அந்த வகையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற 'டால்பி' திரையரங்கில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:30 மணிக்குத் தொடங்கிய இந்த 98வது ஆஸ்கர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 'சின்னர்ஸ்' (Sinners) மற்றும் 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' (One Battle After Another) ஆகிய படங்கள் கடும் போட்டி நிலவின.

இந்தநிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சின்னர்ஸ்' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த அசல் திரைக்கதை விருது, சிறந்த அசல் பாடல் விருது, சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது என மொத்தம் 4 ஆஸ்கார் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.

அதேபோல,13 பிரிவுகளில் போட்டியிட்ட 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகர், சிறந்த கேஸ்ட்டிங், சிறந்த படத்தொகுப்பு மற்றும் சிறந்த Adapted திரைக்கதை ஆகிய பிரிவுகளில் மொத்தம் 6 விருதுகளை வென்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com