சினிமாவை கட்டுப்படுத்தும் ஓ.டி.டி.: ஆர்.கே.செல்வமணி புலம்பல்

ஹீரோக்களால் கூட இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியவில்லை என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் போது ஆர்.கே.செல்வமணி பேசினார்.

சினிமாவை கட்டுப்படுத்தும் ஓ.டி.டி.: ஆர்.கே.செல்வமணி புலம்பல்
Published on

சென்னை,

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி பங்கேற்று பேசிய போது,“ஓ.டி.டி.யும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓ.டி.டி. வந்தது. இப்போது ஓ.டி.டி. சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது” என்றார்.

திரையுலகில் ஓ.டி.டி. தளங்கள் மிகப்பெரிய அங்கமாகியுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் 'யுவர் பேக்கர்ஸ் பிளே' என்ற ஓ.டி.டி. தளம் தொடங்கப்பட்டிருக்கிறது.

இதன் தொடக்க விழாவில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி பங்கேற்று பேசும் போது, “ஓ.டி.டி.யும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓ.டி.டி. வந்தது. இப்போது ஓ.டி.டி. சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. முன்பு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கிய ஓ.டி.டி. நிறுவனங்கள் இப்போது படம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் தான் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். ஹீரோக்களால் கூட இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யமுடியவில்லை. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது.

தமிழ் சினிமாவில் சுமார் 1,000 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் 200 நல்ல படங்களாவது இருக்கும். இந்த சூழலில் தமிழில் ஒரு ஓ.டி.டி. நிறுவனம் தொடங்கியது மகிழ்ச்சி. குறிப்பாக படத்தின் லாபத்தில் 20 சதவீதம் சினிமா தொழிலாளர்களுக்கு கிடைக்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன்” என்றார்.

இதுகுறித்து ஓ.டி.டி. நிறுவனர் கிஷோர் ஆதித்யா கூறும்போது, "சிறிய படங்களை பார்க்க வைக்க முயற்சி இது. இதில் சப்ஸ்கிரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாகவே படத்தை பார்க்கலாம். படத்தை பார்த்து விருப்பம் இருந்தால் விரும்பும் தொகையை அளிக்கலாம்”, என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com