'சலார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ’சலார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
'சலார்' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சலார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சலார்' திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com