கொரோனாவில் இருந்து மீண்ட பிருதிவிராஜ்

கொச்சியில் நடந்த ஜனகனமன என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனாவில் இருந்து மீண்ட பிருதிவிராஜ்
Published on

நடிகர் பிருதிவிராஜ் சில தினங்களுக்கு முன்பு கொச்சியில் நடந்த ஜனகனமன என்ற மலையாள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றபோது கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்றார். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இது மலையாள பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படப்பிடிப்பில் துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து திரும்பி விடுவேன் என்று பிருதிவிராஜ் கூறினார். சிகிச்சைக்கு பின் தற்போது பிரிதிவிராஜ் குணமடைந்துள்ளார். முகநூலில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனக்கு தற்போது கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என்று வந்துள்ளது. ஆனாலும் இன்னும் ஒருவாரம் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். எனது உடல்நலனில் அக்கறை எடுத்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com