பணம் படைத்தவர்களுக்கு ஓவியாவின் அறிவுரை

பணம் படைத்தவர்களுக்கு ஓவியா அறிவுரை வழங்கியுள்ளார்.
பணம் படைத்தவர்களுக்கு ஓவியாவின் அறிவுரை
Published on

சென்னை,

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை சேர்த்த நடிகை ஓவியா அதே அரங்கில் ஆரவ்வுடன் ஏற்பட்ட காதல் தோல்வியில் நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பானது. சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை தற்கொலை செய்யும் அளவுக்கு தொந்தரவு செய்ய கூடாது. தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் நிலைமை தமிழ்நாட்டில் இன்னொருவருக்கு வரக்கூடாது என்றெல்லாம் வலைத்தளத்தில் பதிவுகளை வெளியிட்டார். எனக்கு மன நிலை சரியில்லை என்று பிரபலப்படுத்தி வைத்து இருக்கிறார்கள் என்றும் ஆதங்கப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் பணம் குறித்து தனது உனர்வை ஓவியா பகிர்ந்துள்ளார். அதில் உங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து நீங்கள் பெருமை கொள்ள வேண்டாம். அந்த பணம் உங்களுக்கு திருப்தியை கொடுக்காது என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஓவியாவுக்கு பதில் அளிக்கும் வகையில் பணம்தான் முக்கியம். அது இல்லாமல் உலகத்தில் எதையுமே செய்ய முடியாது திடீரென்று பணத்தை பற்றி ஏன் தத்துவம் பேசுகிறீர்கள் என்றெல்லாம் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com