

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் மீ டூவில் சிக்கி உள்ளனர். பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிலர் வற்புறுத்தி
உள்ளார்கள். இந்த நிலையில் நடிகை ஓவியா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'உங்கள் மகள்களுக்கு தற்காப்பு கலைகள் மற்றும் மீ டூ பற்றி சொல்லி கொடுப்பதற்கு பதிலாக உங்கள் மகன்களுக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுங்கள்'' என்று கூறியுள்ளார். இந்த பதிவை ஓவியா ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள். ஆண்கள் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை என்று ஓவியா பதிவுக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இருபாலருக்கும் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க சொல்லி இருக்கலாம் என்றும் பதிலடியாக பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். ஓவியா தற்போது சம்பவம், ராஜா பீமா ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.