நடிகை ஓவியா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!


நடிகை ஓவியா  நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!
x

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஓவியா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்தின் போஸ்டர்களை பகிர்ந்து கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது .

சென்னை,

தமிழில் 'களவாணி' படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். மெரினா, மதயானை கூட்டம், கலகலப்பு, சிலுக்குவார்பட்டி சிங்கம், 90 எம்.எல்., களவாணி-2, காஞ்சனா-3 போன்ற பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. தமிழ் தவிர மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராஜ பீமா, சம்பவம், பூமர் அங்கிள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர் ஏற்கனவே அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஹர்பஜன் சிங். அடுத்தது இவர் புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தினை ஜான் பால்ராஜ் இயக்கி இருக்கிறார். இதில் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ஓவியா, வி டிவி கணேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை சீன்டோ ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு சேவியர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு புதிய போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. அதே சமயம் போஸ்டரின் மூலம் கதாபாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஹர்பஜன் சிங் இந்த படத்தில் டாக்டர் ஜேம்ஸ் மல்கோத்ரா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை ஓவியா ,வர்ணா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் ஜி.பி. முத்து, முத்து மாமா கதாபாத்திரத்தில் நடிக்க விடிவி கணேஷ், கடப்பாறை கணேசன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story