'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றியை கொண்டாடிய பா.ரஞ்சித்

படத்தில் கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
'ப்ளூ ஸ்டார்' படத்தின் வெற்றியை கொண்டாடிய பா.ரஞ்சித்
Published on

சென்னை, 

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ப்ளூ ஸ்டார்'. இப்படத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்த இப்படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டார்.

இந்த நிலையில் கடந்த 25-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தின் வெற்றியை அதன் தயாரிப்பாளரான இயக்குனர் பா.ரஞ்சித்துடன் படக்குழுவினர்  கேக் வெட்டி கொண்டாடினர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

X

Daily Thanthi
www.dailythanthi.com