இந்தி படம் குறித்து அப்டேட் கொடுத்த பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் இயக்கும் இந்தி படத்திற்கு 'பிர்சா முண்டா' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
Pa. Ranjith gave an update about the Hindi film
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா, கபாலி மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களுக்காக பாராட்டை பெற்றவர்.

சமீபத்தில் இவர் இயக்கத்தில் உலகம் முழுவதும் வெளியான படம் தங்கலான். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். இப்படம் அடுத்த மாதம் 6ம் தேதி வட இந்தியாவில் இந்தியில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் பா.ரஞ்சித்திடம் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தான் இயக்க உள்ள இந்திப் படம் குறித்த அப்டேட்டைத் தரும்படி கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'நான் ஒரு இந்தி படத்திற்கு கையெழுத்திட்டிருக்கிறேன். அப்படத்திற்கு 'பிர்சா முண்டா' என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

'அப்படத்திற்கான ஸ்கிரிப்ட் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த ஸ்கிரிப்டை நானும் என் நண்பர் ஒருவரும் சேர்ந்து எழுதி இருக்கிறோம். இப்போது நடிகர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் உள்ளோம். விரைவில் நாங்கள் அறிவிப்போம்" என்றார். ரன்வீர் சிங் மற்றும் அக்சய் குமார், பா ரஞ்சித் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com