பத்மபூஷன் விருது - அஜித்குமாருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து


Padma Bhushan Award - Actor Rajinikanth congratulates Ajith Kumar
x
தினத்தந்தி 28 Jan 2025 10:18 AM IST (Updated: 28 Jan 2025 10:19 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை,

நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று சென்னை விமானநிலையம் வந்த ரஜினிகாந்த், அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story