பத்மஸ்ரீ விருது விவகாரம்: விமர்சகர்களுக்கு ரவீனா தாண்டன் பதிலடி

பத்மஸ்ரீ விருது விவகாரம்: விமர்சகர்களுக்கு ரவீனா தாண்டன் பதிலடி
Published on

தமிழில் சாது படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர் ரவீனா தாண்டன். இந்தியில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். பல மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற கே.ஜி.எப் 2 படத்திலும் நடித்து இருந்தார். ரவீனா தாண்டனுக்கு சமீபத்தில் மத்திய அரசு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இதற்கு வலைத்தளங்களில் விமர்சனங்கள் கிளம்பின. ரவீனா நாட்டுக்காக என்ன செய்தார். சினிமாவில் கவர்ச்சியாக நடித்தவருக்கு பத்மஸ்ரீ விருது பெற என்ன அருகதை இருக்கிறது'' என்றெல்லாம் பதிவுகள் வெளியிட்டு கண்டித்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்து ரவீனா தாண்டன் அளித்துள்ள பேட்டியில், "என்னை விமர்சிப்பவர்கள் கிளாமரை மட்டுமே பார்க்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் எனது கடுமையான உழைப்பு அவர்களுக்கு தெரியவில்லை. நான் சினிமாவில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்கவில்லை. பல சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் படங்களில் கூட நடித்தேன்.

எனக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்ததை சிலர் விமர்சித்தாலும், எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்கள்தான் அதிகம்'' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com