பாக்ஸ் ஆபீஸ் :பத்மாவத் இந்த வார இறுதியில் ரூ.200 கோடியை தொடும்

உலக பாகஸ் ஆபீசில் பத்மாவத் திரைப்படம் இந்த வார இறுதியில் ரூ. 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. #boxoffice #Padmaavat
பாக்ஸ் ஆபீஸ் :பத்மாவத் இந்த வார இறுதியில் ரூ.200 கோடியை தொடும்
Published on

மும்பை

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், ஆகியோரது நடிப்பில் உருவான பத்மாவத் படம், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வெளியாகி பத்மாவத் படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. கடந்த 8 நாட்களில் உலக அளவில் இதன் மொத்த வசூல் ரூ.162 கோடியை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வார இறுதியில் பத்மாவத் 200 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தீபிகாவிடம், பத்மாவத் படத்தில் உங்களை கவர்ந்த காட்சி எது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கில்ஜி - ராவல் இடையேயான சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. இந்த காட்சி படமாக்கப்பட்ட போது நானும் இருந்தேன். இரண்டு பெரிய ஸ்டார்கள் இது போன்று சண்டையிட்டது இல்லை. இருவரும் நிஜமாகவே ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டையிடுவது போன்று இருந்தது என்றார்.

மேலும் அவர் கூறும் போது ,

இந்தப் படம் பற்றி இயக்குனர் பன்சாலி கூறும்போது, எனக்கு ராணி பத்மாவதி பற்றி தெரியாது. தெரிந்து வைத்திருக்க, நான் வரலாற்று மாணவியும் அல்ல. கதையை கேட்ட பிறகுதான் சில புத்தகங்களைத் தேடி படித்து அவரைப் பற்றி தெரிந்துகொண்டேன். பிறகு அந்த கேரக்டராக மாறிவிட்டேன். அந்த கேரக்டரின் பாதிப்பில் இருந்து இன்னும் நான் வெளியேறவில்லை. அதில் இருந்து வெளியேற இன்னும் நாட்களாகும். இந்தப் படத்தில் நடித்ததற்கு எனக்கு அதிக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

படத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தும் கிடைத்திருக்கும் வெற்றி பெரிய விஷயம். இந்தப் படத்தை என் பெற்றோருக்கு பெங்களூரில் பிரத்யேகமாக திரையிட்டோம். அவர்கள் என் நடிப்பை பார்த்து மெய்மறந்தார்கள். மீண்டும் வரலாற்று கேரக்டரில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். இப்போதைக்கு அப்படியொரு எண்ணம் இல்லை. இருந்தாலும் சினிமாவில் எதுவும் நடக்கலாம். என்னை பாதிக்கும் வரலாற்றுக் கதைகள் வந்தால் அதில் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com