அனைவரும் ஆலியாபட், தீபிகா படுகோனேபோல இருக்க விரும்புகிறார்கள் - ஆடை வடிவமைப்பாளர்

அனைவரும் ஆலியாபட், தீபிகா படுகோனேபோல இருக்க விரும்புகிறார்கள் என்று பாகிஸ்தான் ஆடை வடிவமைப்பாளர் கூறுகிறார்.
அனைவரும் ஆலியாபட், தீபிகா படுகோனேபோல இருக்க விரும்புகிறார்கள் - ஆடை வடிவமைப்பாளர்
Published on

மும்பை,

ஆலியாபட், தீபிகா படுகோனே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருகின்றனர். இவர்களில் நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை 6 வருடங்களாக காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆலியாபட் கடந்த 2022-ம் ஆண்டு பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் திருமணத்துக்கு பிறகும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பேஷனிலும் கலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தீபிகா படுகோனே மற்றும் ஆலியாபட்போல தோற்றமளிக்குமாறு தங்களை மாற்ற பெண்கள் தன்னிடம் கேட்கிறார்கள் என்று பாகிஸ்தான் ஆடை வடிவமைப்பாளர் நோமி அன்சார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

அனைவரும் என்னிடம் நம்பிக்கையுடன் வந்து சில கோரிக்கைகளை கூறுகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற எதையாவது புதிதாக செய்தால்தான் முடியும். அனைவரும் ஆலியாபட் மற்றும் தீபிகா படுகோனே போன்று இருக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களிடம் அதற்குரிய உடல் அமைப்போ வாழ்க்கை முறையோ இல்லை.

அப்போது அவர்களிடம் நான் கேளிக்கையாக ஆலியாபட்டின் தந்தைபோல தோற்றமளிக்க செய்கிறேன் என்று கூறுவேன், என்றார்.

.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com