நடிகை மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் கைது


நடிகை மாளவிகா மேனன் பற்றி அவதூறு பரப்பிய இளைஞர் கைது
x

சமூக வலைதளங்களில் கண்ணியமற்ற முறையில் யாரை பற்றியும் எப்படியும் பேசலாம் என சிலர் செயல்படுகிறார்கள் என்று நடிகை மாளவிகா மேனன் கூறியுள்ளார்.

பிரபல மலையாள நடிகை மாளவிகா மேனன், தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி என்ற திரைப்படத்தில் ஹீரோயின் தங்கையாக நடித்தவர் நடிகை மாளவிகா மேனன். இவர் விழா, பிரம்மன், வெத்துவேட்டு, பேய் மாமா, அருவா சண்ட போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் பற்றி சமூக வலைதளத்தில் சமீப நாட்களாக அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டு வந்தன.

இதுபற்றி சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்த மாளவிகா, சமூக வலைதளங்களில் கண்ணியமற்ற முறையில் யாரை பற்றியும் எப்படியும் பேசலாம் என்கிற உரிமை இருப்பதாக நினைத்துக்கொண்டு சிலர் செயல்படுகிறார்கள். விழாவுக்கு என்ன டிரெஸ் அணிந்து வரப்போகிறீர்கள் என்று கூட பலர் போன் செய்து விசாரிப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் மாளவிகா மேனன் பற்றி அவதூறாகப் பதிவிட்டதாக பாலக்காடு அட்டப்பாடியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பவரை கொச்சி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

1 More update

Next Story