'பனை மரம் அமிர்தம்.. சீமைக் கருவேலம் விஷம்..' - கவிஞர் வைரமுத்து பேச்சு

வெளிநாட்டில் இருந்து வந்தது விஷம், உள்ளூரில் மறக்கப்பட்டது அமிர்தம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.
'பனை மரம் அமிர்தம்.. சீமைக் கருவேலம் விஷம்..' - கவிஞர் வைரமுத்து பேச்சு
Published on

சென்னை,

சென்னையில் உள்ள சர்.பி.டி.தியாகராயர் அரங்கத்தில் எழுத்தாளர் சாராஜ் எழுதிய 'நீர்க்கொல்லி' நாவல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, "பனை மரம் என்பது அமிர்த விருட்சம். சீமைக் கருவேலம் என்பது விஷ விருட்சம். வெளிநாட்டில் இருந்து வந்தது விஷம். உள்ளூரில் மறக்கப்பட்டது அமிர்தம். இது ஒரு பெரிய தேசியச் செய்தி.

அந்தந்த சீசனுக்கு ஏற்ற உணவை சாப்பிட்டால் நமது உடல் பிரமாதமாக இருக்கும். நவம்பர் மாதம் வந்துவிட்டால், மார்ச் மாதம் வரை நான் தினமும் 2 பனங்கிழங்குகளை சாப்பிடுவேன். இன்று முதல் பனங்கிழங்கு சாப்பிட்டு பழகுங்கள். உங்கள் குடல் மட்டும் பனங்கிழங்கை செரித்து விட்டால், உங்கள் உடலுக்கு ஒரு தீங்கும் இல்லை என்று பொருள்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com