பான் மசாலா விளம்பர சர்ச்சை: நடிகர் அக்ஷய் குமார் விளக்கம்

அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பர படத்தில் மீண்டும் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின.
பான் மசாலா விளம்பர சர்ச்சை: நடிகர் அக்ஷய் குமார் விளக்கம்
Published on

இந்தியில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அக்ஷய் குமார், தமிழில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து இருந்தார்.

இந்த நிலையில் அக்ஷய் குமார் பான் மசாலா விளம்பர படத்தில் மீண்டும் நடிப்பதாக சமூக வலைத்தளத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. அவர் நடித்த பான் மசாலா விளம்பரமும் வைரலாகி வருகிறது.

இதற்கு விளக்கம் அளித்து வலைத்தளத்தில் அக்ஷய் குமார் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போது வைரல் ஆகி வரும் பான் மசாலா விளம்பரம் 2021 அக்டோபர் மாதத்தில் படமாக்கப்பட்டது. ஒப்பந்தத்தின்படி இந்த விளம்பரத்தை 2023 நவம்பர் மாதம் வரை ஒளிபரப்பலாம். இதுதவிர நான் புதிதாக இது போன்ற எந்த விளம்பரத்திலும் நடிக்கவில்லை. ஏற்கனவே பான் மசாலா விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்து இருக்கிறேன். அதன் பிறகு இதுவரை அத்தகைய விளம்பரங்களில் நடிக்கவே இல்லை. தயவு செய்து இது போன்ற தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம்'' என்று கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன் ஏற்கனவே பான் மசாலா விளம்பரத்தில் நடிப்பதற்காக வாங்கிய பணத்தை நல்ல காரியத்துக்கு கொடுத்து விட்டேன் என்றும், இனிமேல் இத்தகைய விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com