மியூசிக் வீடியோ மூலம் திரையுலகில் அறிமுகமாகும் 'தக் லைப்' பட நடிகரின் மகள்

பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் பங்கஜ் திரிபாதி.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் நடிகர் பங்கஜ் திரிபாதி. இவரது மகள் ஆஷி திரிபாதி. இவர் தற்போது 'ரங் தாரோ' என்ற மியூசிக் வீடியோ மூலம் திரையுலகில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த பாடலை மைனக் பட்டாச்சார்யா மற்றும் சஞ்சனா ராம்நாராயண் பாடியுள்ளனர் இதற்கு அபினவ் ஆர்.கவுசிக் இசையமைத்துள்ளார்.
தனது மகள் திரையுலகில் அறிமுகமானது குறித்து பங்கஜ் திரிபாதி கூறுகையில், "ஆஷியை திரையில் பார்த்தது உணர்ச்சிபூர்வமாகவும் பெருமிதமாகவும் உள்ளது. முதல் திட்டத்திலேயே இதுபோன்ற நடிப்பை அவர் வழங்கி இருப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. இந்த பயணம் அவரை எங்கு அழைத்துச் செல்கிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்' என்றார்.
பங்கஜ் திரிபாதி , 'தக் லைப்' படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story






