முடங்கிய பட உலகம் ஹாலிவுட் நடிகர்- நடிகைகள் ஸ்டிரைக்

முடங்கிய பட உலகம் ஹாலிவுட் நடிகர்- நடிகைகள் ஸ்டிரைக்
Published on

ஹாலிவுட்டில் நடிகர்-நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தனித்தனியாக சங்கங்கள் உள்ளன. இந்த நிலையில் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக ஹாலிவுட் எழுத்தாளர் சங்கத்தினர் கடந்த 11 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தகுதியான சம்பளம் வழங்கும்வரை எந்த படத்திலும் பணியாற்ற மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது 1 லட்சத்து 60 ஆயிரம் ஹாலிவுட் நடிகர் நடிகைகளை உறுப்பினர்களாக கொண்ட ஸ்கிரீன் ஆக்டர் ஸ்கில்டு அமைப்பும் எழுத்தாளர் சங்கத்துக்கு ஆதரவாக வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்து உள்ளது.

கோரிக்கைகள் நிறைவேறும்வரை நடிகர் நடிகைகள் எந்த படத்திலும் நடிக்கவோ, படம் சம்பந்தமான விழாக்களில் கலந்து கொள்ளவோ கூடாது என்றும், டப்பிங், நடனம், இசை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்றும் ஸ்கிரீன் ஆக்டர் ஸ்கில்டு அறிவித்து உள்ளது.

இதனால் ஹாலிவுட் சினிமா தொழில் அடியோடு முடங்கி உள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளன. புதிய படங்களின் ரிலீசும் தள்ளிப்போகிறது. எழுத்தாளர்களும், நடிகர் நடிகைகளும் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது கடந்த 63 ஆண்டுகளில் இதுதான் முதல் முறை ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com