வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வாங்கிய பாரமவுண்ட் நிறுவனம்

வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு வாங்க பாரமவுண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது
வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை வாங்கிய பாரமவுண்ட் நிறுவனம்
Published on

வாஷிங்டன்,

புகழ்பெற்ற ஸ்ட்ரீமிங் தளமான நெட்பிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் திரைப்பட, தொலைக்காட்சிப் பிரிவுகளையும் அதன் ஸ்ட்ரீமிங் பிரிவையும் வாங்குவதற்கான ஒரு மிகப்பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 7,200 கோடி அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ7 லட்சம் கோடி . இந்த ஒப்பந்தத்தின் மூலம், புகழ்பெற்ற பிரீமியம் ஸ்ட்ரீமிங் சேவையான ‘எச்பிஓ மேக்ஸ்' ஓடிடி தளம் நெட்பிளிக்ஸ் வசம் வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஹாலிவுட் பழமையான தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை சுமார் ரூ.10 லட்சம் கோடிக்கு (110 பில்லியன் டாலர்) வாங்க பாரமவுண்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. நெட்பிளிக்ஸ், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க முயன்ற நிலையில் அந்த முயற்சியை தோற்கடித்த பாரமவுண்ட், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேரத்தில், வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தின் ஒரு பங்குக்கு 31 அமெரிக்க டாலர் வரை வழங்க பாரமவுண்ட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த விலையை விட அதிக தொகைக்கு பங்குகளை வாங்கினால் லாபகரமாக இருக்காது என்பதால், நெட்பிளிக்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை பாரமவுண்ட் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது.

தி சோப்ரானோஸ், தி ஒயிட் லோட்டஸ் போன்ற ‘எச்பிஓ மேக்ஸ்' ஓடிடி தளத்தின் பிரபலமான படைப்புகள் பாராமவுண்ட் நிறுவனத்துக்குச் சொந்தமாகின்றன. உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட 'கேம் ஆப் த்ரோன்ஸ்', 'ஹாரி பாட்டர்', டிசி காமிக்ஸ் போன்ற பிரபலமான திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் உரிமைகளும் பாராமவுண்ட் நிறுவனத்தின் கீழ் வருகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com