"பறந்து போ" பெற்றோர்களுக்கான படம் - இயக்குனர் ராம்

ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘பறந்து போ’ படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகிறது.
"பறந்து போ" பெற்றோர்களுக்கான படம் - இயக்குனர் ராம்
Published on

சென்னை,

எதார்த்தமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனதை வென்றவர் இயக்குனர் ராம் . "கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி" உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு யுவன் பின்னணி இசையமைத்துள்ளார்.

பிடிவாதமான பள்ளி சிறுவனும் பணத்தின் மீது அதிக மோகம் கொண்ட அவனது தந்தையும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி மேற்கொள்ளும் பயணம் குறித்த 'ரோட் டிராமா'வாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் பிரீமியர் ஷோ கோவை பிராட்வே சினிமாவில் திரையிடப்பட்டது. இதனை பள்ளி மாணவர்கள், குடும்பத்தினர் கண்டுகளித்தனர். அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராம் பார்வையாளர்களிடம் இந்த திரைப்படம் குறித்து கலந்துரையாடி படம் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இயக்குநர் ராம், " அனைவரும் சிரிக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்த படத்தை எடுத்தேன். அதேபோல் பல்வேறு இடங்களில் அதிக சிரிப்புகளை பார்க்க முடிந்தன. இந்த படம் குழந்தைகளுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுத்து வாழ்வும் பெற்றோர்களுக்குதான். இதுகுறித்து நான் சிறுவர்களிடம் கேட்டபோது கூட அப்பாக்கள்தான் பொய் கூறுகிறார்கள், அம்மாக்கள் பொய் கூறவில்லை என்றார்கள். நா.முத்துக்குமாரை அனைவரும் மிஸ் செய்கிறோம். ஜூலை 19ம் தேதி நா.முத்துகுமாரின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு விழா நடத்துகிறோம். அந்த விழா அவரின் புகழை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும். மலை ஏறினால் மகத்தான விஷயங்கள் கிடைக்கும். நடிகை அஞ்சலி எனக்கு மிகவும் சப்போர்ட்டாக இருந்தவர். .இந்த படத்திலும் நடத்துள்ளார். உண்மைத்தனமான படங்களை மக்கள் ரசிக்கிறார்கள். மக்கள் பிரமாண்டம் என அனைத்தையும் விரும்புவார்கள். மேலும் மக்கள் சுவாரஸ்யம் நிறைந்தது கவலைகளை மறப்பது போன்ற படங்களை ஏற்று கொள்கிறார்கள். உச்சபட்ச நடிகர்கள் அழைத்தால் படம் செய்வேன், ஆர்வம் உள்ளது.பாக்ஸ் ஆபிஸ் கண்டிப்பாக வேண்டும்" என்றார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com