'பராரி' படத்தின் டிரெய்லர் வெளியீடு

எழில் பெரியவேடி இயக்கியுள்ள 'பராரி' படம் வருகிற 22-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
Published on

சென்னை,

ஹரி சங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் இயக்குனர் எழில் பெரியவேடி ராஜுமுருகனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

'பராரி' என்ற சொல் தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்கு தங்களுடைய வாழ்க்கைக்காக போகும் மக்களைக் குறிக்கிறது என்று படக்குழுவினர் குறிப்பிடுகின்றனர். திருவண்ணாமலையை சுற்றி இருக்கும் அந்த நிலத்தின் எளிய மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களுக்கான அரசியலையும் 'பராரி' பேசுகிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் இந்த திரைப்படத்தை காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், 'பராரி' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியானது. இந்த டீசரில் ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரை இயக்குனர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com