''பராசக்தி'' - ஸ்ரீலீலா பற்றி பேசிய அதர்வா


Parasakthi - Atharva talking about Sreeleela
x
தினத்தந்தி 20 Jun 2025 7:05 AM IST (Updated: 20 Jun 2025 1:05 PM IST)
t-max-icont-min-icon

''பராசக்தி'' படம் பற்றி சில்ல சுவாரசியமான தகவல்களை அதர்வா பகிர்ந்துள்ளார் .

சென்னை,

'பராசக்தி' படம் குறித்தும் ஸ்ரீலீலா பற்றியும் சில சுவாரசியமான தகவல்களை நடிகர் அதர்வா பகிர்ந்துள்ளார்.

அதர்வா நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் படம் ''டி.என்.ஏ''. இப்படத்தை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனின் ''பராசக்தி'' படத்தில் நடித்து வருகிறார். இதில், அவர்களுடன் ரவி மோகன், ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், ''பராசக்தி'' படம் பற்றி சில சுவாரசியமான தகவல்களை அதர்வா பகிர்ந்துள்ளார் . அவர் கூறுகையில்,

''பராசக்தி ஸ்கிரிப்டை படித்ததும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கண்டிப்பாக நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஏற்கனவே 50 முதல் 60 சதிவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

எடுத்த வரைக்கும் எல்லாம் நன்றாக வந்திருக்கிறது. ரசிகர்கள் படத்தை பார்த்து எந்த மாதிரி ரியாக்சன் கொடுக்க போகிறார்கள் என்பதை பார்க்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். ஸ்ரீலீலாவை பொருத்தவரைக்கும், அவர் தெலுங்கு சினிமாவில் பண்ண படங்களை விட , இந்த படத்தில் ஒரு நடிகையாக ஜொலிப்பார்" என்றார்.

1 More update

Next Story