நடிகர் ரவிமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த 'பராசக்தி' பட இயக்குனர்


நடிகர் ரவிமோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பராசக்தி பட இயக்குனர்
x
தினத்தந்தி 10 Sept 2025 10:41 AM IST (Updated: 10 Sept 2025 10:42 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரவிமோகன் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது கணேஷ் கே பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் 'பராசக்தி' படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மேலும், சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி ஒரே நேரத்தில் மூன்று திரைப்படங்களை தயாரிக்க உள்ளார். அதில், முதல் படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே நடிக்கஉள்ளார். இரண்டாவதாக யோகி பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், நடிகர் ரவிமோகன் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், "பராசக்தி" பட இயக்குனர் சுதா கொங்கரா நடிகர் ரவிமோகனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வளைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தைத் தேடுங்கள், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200 சதவீதம் ஈடுபடுவதைக் காண்பீர்கள்! என் அழகான ஜென்டில்மேன் நடிகரே, உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!! பிறந்தநாள் வாழ்த்துகள், உங்களுக்கு இனிய நாட்கள் அமைய வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story