வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” திரைப்பட கண்காட்சி

‘பராசக்தி’ படத்தின் படப்பிடிப்பு பொருள்காட்சியை இலவசமாக கண்டுகளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் கோட்டத்தில் “பராசக்தி” திரைப்பட கண்காட்சி
Published on

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம்,பராசக்தி. இது சிவகார்த்திகேயனின் 25வது படம். ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.

இதனிடையே இப்படத்தின் அடி அலையே, ரத்னமாலா, நமக்கான காலம் பாடல்கள் வெளியாகி நல்ல பெற்று வருகிறது. திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரோமோஷன்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி படத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்த படக்குழுவும் கலந்து கொண்டு தங்களது அனுபவத்தை பகிர்ந்தனர்.

இந்நிலையில், இப்படத்தில் 60-களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்டகார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் வள்ளுவர் கோட்டத்தில் உயிர்ப்பித்துள்ளனர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இது கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

பழைய காலத்துக்கான பொருள்கள் அடங்கிய பராசக்தி கண்காட்சியை நாளை இரவு 10 மணிவரை இலவசமாக பார்வையிடலாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com