பராசக்தி படம் : இலங்கையில் உருவான மதுரை ரெயில் நிலையம்

சுதா கொங்கரா இயக்கிய வரும் 'பராசக்தி' படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
பராசக்தி படம் : இலங்கையில் உருவான மதுரை ரெயில் நிலையம்
Published on

கொலும்பு,

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியேர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மதுரையில் நடந்துவந்த படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. தற்போது பராசக்தி படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இங்கு தான் படத்தின் முக்கியமான பகுதிகளின் காட்சிகள் படமாக்கபட்டு வருகின்றன. இதற்காக மதுரை ரெயில்வே ஸ்டேஷன் மற்றும் டெல்லி போன்று பிரத்யேகமாக செட் போடப்பட்டு படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு நடைபெறும் படப்பிடிப்பில் குரு சோமசுந்தரம் தொடர்பான காட்சிகளும் படமாக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com